/* added by me */

பா.ஜீவானந்தம்.


பிறப்பு : ஆகஸ்டு ௨௧(21), ௧௯0௬(1906) இறப்பு: சனவரி ௧௮(18), ௧௯௬௩(1963)

தோழர். ப.ஜீவானந்தம், தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

இவரைப்பற்றி பிறகு எழுதுகிறேன். அதுவரை இதோ இவரின் கூற்றுக்கள்.

"எனக்கு உங்களுடைய அபின் தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன். அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிர்டையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்."


இதோ இவரின் படைப்புகள்
  • மதமும் மனித வாழ்வும்
  • சோஷலிஸ்ட் தத்துவங்கள்
  • புதுமைப்பெண்
  • இலக்கியச்சுவை
  • சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
  • மொழியைப்பற்றி
  • ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
  • மேடையில் ஜீவா (தொகுப்பு)
  • சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
  • கலை இலக்கியத்தின் புதிய பார்வை
  • தேசத்தின் சொத்து (தொகுப்பு)
Author: இந்துமதி.சி.பா // Category: , , ,

0 Responses to "பா.ஜீவானந்தம்."

Post a Comment