/* added by me */

அ முதல் ஃ வரை.....



இயற்கையாக
உண்டாகும் ஒலி எந்த ஒரு மொழிக்கும் சொந்தம் அன்று. இயற்கையாக தோன்றும் ஒலியை அடிப்படையாக வைத்து உருவாகும் மொழியே இயற்கை மொழி. அச்சிறப்பு நம் தமிழ் மொழிக்கு உண்டு. அதனை பற்றி சற்று பார்ப்போம்.

நம் திருவள்ளுவர்,

"அகர முதல எழுதெல்லாம்" என்றுதான் திருக்குறளை ஆரம்பித்திருப்பார்.

சுந்தரமூர்த்தி நாயனாரும்,

"அகரம் முதல் எழுத்தாகி நின்றாய்" என்றும்

சிவஞான முனிவர் தன் சோமேசர் முதுமொழி வெண்பாவில்,

"அகரம் முதல எழுத்தெல்லாம்" என கூறியிருப்பார்கள்

ஏன் அனைவரும் அகரம் என்ற சொல்லை முதல் சொல்லாக கூறியிருக்கிறார்கள் என்று பார்த்தால், தமிழில் முதலில் தோன்றிய சொல் அகரம் என்பதே. இந்த நான்கு எழுத்துக்கள் தான் தமிழில் மூல எழுத்துக்கள்.

சரி, அகரம் என்ற சொல் எப்படி உண்டாகிற்று?

குமரிக்கண்டத்தில் மாந்தர்கள் உண்டான பிற்பாடு, கை - கால் - கண் ஆகியவற்றின் உதவி கொண்டு நாடக வடிவில் தத்தம் தகவல்களை பறிமாறிக்கொண்டிருந்தனர். பின்னர் விலங்குகள் எழுப்பும் ஒலியில் இருந்து, அதன் உதவி கொண்டு தானும் ஒலி எழுப்ப ஆரம்பித்தனர்.


எல்லா உயிர்களும் வாயை திறந்தவுடன் எழுப்பும் ஒலி "" என்பதே.

காகம் கரையும் பொழுது உண்டாகும் ஒலி "" என்பது.

கோட்டன் உளரும் பொழுது உண்டாகும் ஒலி "ம்".

ஆக இம்மூன்று எழுத்துகளும் இயற்கை ஒலிகள். இவ்வொலிகளை வைத்து மனிதர்கள் முதலில் "--ம்" என்ற ஒலியை இசைக்கத் தொடங்கினார்.

அப்பொழுது நுனிநா அண்ணத்தை வருட உண்டான ஒலி "" ஆகும்.

அறிவோர்கள் செயற்கை ஒளியான "" வையும் கூட்டி "அ-க-ர-ம்" என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த நன்கு எழுத்துக்களுமே தமிழில் ஏனைய எல்லா எழுத்துக்களுக்கும் முன்னோடி. இந்த எழுத்துக்களை வைத்தே மாற்ற எழுத்துக்கள் தமிழ்மொழியில் உண்டாயின.

மற்ற எழுத்துக்களின் தோற்றத்தையும் பார்ப்போம்

மற்ற எழுத்துக்களின் தோற்றம்

அ ------ க -----------ர---------ம்
--|--------|------------|----------|
--|--------|------------|----------|
ஆ-------____------ல----------ப்
--|-------|------|------|----------|
--|-------ச----ங------|----------|
இ--------|------------ந---------வ்
--|-------_____------|
--|-------|-------|-----|
ஈ-------ய-----த-----ள
--|-------|--------------|
உ-------ஞ-----------ழ
--|


[குறிப்பு : இடைவெளியை சரிசெய்வதற்காக (-) பயன்படுத்தப்பட்டது ]



கூட்டெழுத்து

(அ + இ = ) எ / ஏ (ல் + த = ) ற

(அ + ய் = ) ஐ (ள் + த = ) ட (ள் + ந = ) ண

(அ + உ = ) ஒ / ஓ

(அ + வ் = ) ஒள


இவ்வாறாக அனைத்து எழுத்துகளும் தோன்றின.

அகரத்தை நீட்டினால் ஆகாரம், இளித்தால் இகரம், குவித்தால் உகரம், இகர உகரங்களை நீட்டினால் ஈகாரம், ஊகாரம். இப்படியே ஏனைய எழுத்துகளும் தோன்றின. மேலும் ஒலிகளுக்கு ஏற்பாடு செய்யும் பொழுது அகரத்துக்கு ஒரு புள்ளியும், ககரத்துக்கு ஒரு புள்ளியும், மகரத்துக்கு ஒரு புள்ளியுமாக இயற்கை ஒலிகளுக்கு மாத்திரம் வைத்து ஃ இம்மாதிரி எழுதலாயினர். இதற்கு அ - க - ம் இனம் = அகம் இனம் ---- அகஇனம் ---- அஃகேனம் என்று வழங்கினர்.

அஃகேனதிலிருந்தே ஏனைய எழுத்துக்களுக்கு வரி வடிவம் கற்பித்தனர். அஃகேனம் வரி வடிவம் எழுதுவதற்கு கருவியாயிருந்தபடியால், இதற்கு ஆயுதம் என்று பெயர் வந்தது.

ஃ என்பது உயிரெழுத்துக்கும் மெய்யெழுதுக்கும் பிறப்பிடமாகையால் இதனை இரண்டிற்கும் இடையில் சிங்கநோக்காக அமைத்தனர்.

உலகில் எந்த மூலையில் குழந்தை பிறந்தாலும் வாயை திறந்து முதலில் பேசத் துவங்கும் பொழுது உண்டாகும் ஒலி

மா - அம்மாவின் குறுக்கம்
பா - அப்பாவின் குறுக்கம்
தா - தா - தாத்தாவின் குறுக்கம்
கா - அக்காவின் குறுக்கம்

என பேசத் துவங்குகின்றன. பின்னர் அவர்களது பெற்றோர்கள் எந்த மொழியை பேசுகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் நாவினை மடக்கி பேச ஆரம்பிக்கிறார்கள்.

மேலும் க்ரீஇ - க்ரீஇ என்று ஒலி எழுப்பும் பறவைகளுக்கு "குருவி" என்றும், கா கா என்று கரைவதால் "காகம்" என்றும், விலங்குகள் மா என்று கத்துவதால் முதலில் "மா" என்றும் பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர்.


ஆகவே தமிழ் மொழியே இயற்க்கை மொழி என்பது தெளிவாகும்.

இத்தகவல்கள் துடிசைகிழார் அ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய "கழகத் தமிழ் வினாவிடை" என்ற புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது

Author: இந்துமதி.சி.பா // Category: , ,

0 Responses to "அ முதல் ஃ வரை....."

Post a Comment