/* added by me */

பாரதிதாசன் வந்தால் (ஒரு கற்பனை)!

தமிழ்நாட்டில் தேர்தல் நேரம். பாவேந்தர் பாரதிதாசனுக்கு எப்படியோ ஒரு அறிவிப்புமடல் கிடைக்கிறது. பாரதிதாசன் விழா நடைபெறுவதாக அந்த மடலில் அறிவிப்பை பார்த்த பாரதிதாசனுக்கு பெரும் மகிழ்ச்சி. தன்னை வாழும் போது நினைக்காதவர்கள் இறந்த பிறகு நினைக்கின்றார்களே என்று நினைத்துக் கொள்கிறார். விழாவை பார்க்கின்ற ஆவல் மேலிடுகிறது. அமரர் உலகில் இருந்து சென்னையில் ஒரு தெருவுக்குள் வந்து இறங்குகின்றார்.

மக்கள் பரபரப்பை பார்த்ததும் வாயில் பாட்டு எழுந்தது

"தமிழ்நாடெங்கும் தடல்புடல்! அமளி!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலை போல் குவியுது
தமிழன் தொண்டர் தடுக்கினும் நில்லார்!
ஓடினார்இ ஓடினார்இ ஓடினார்இ நடந்தே!"

"சரியா சொன்னீங்கய்யாஇ தேர்தல் நேரமில்ல அதான் இப்பிடி இருக்குங்க" என்றார் ஒரு குடிமகனார்

ஒரு சுவரொட்டி கண்ணில் பட்டது.
"அன்னை ஆதிபராசக்தியின் ஆட்சி மலர அளித்திடுங்கள் உங்கள் வாக்கை அம்மாவுக்கே"
படித்து பரவசமடைகிறார் பாரதிதாசன.

"ஆகா பாரதி இதைப் படித்தால் மகிழ்வார் பாரதியின் கனவு மெய்ப்பட்டதே"

"அய்யா நீங்களும் இவங்க கட்சிதானா?" - கேட்டார் அந்தக் குடிமகனார்

"கட்சியா?" திகைத்தார் பாவேந்தர்

"அய்யா நீங்க எந்தக் கட்சி?"

"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
கீழ்ச் செயல்கள் விட வேண்டும்! இராவணன்தன்
கீர்த்தி சொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்!"

"அட இவரு திமுக! தலைவரு சொன்னதை அப்படியே சொல்றாரு. வீரப்பனையும் இராவணனையும் பழிக்காதீர்னு தலைவர் சொன்னார்ல"

"மத ஓடத்தில் ஏறிய மாந்தரே - பலி
பீடத்தில் சாய்ந்தீரே"

"திமுக மற்ற கட்சியோட கூட்டு வைச்சது இவருக்கு புடிக்கல. என்ன பண்றது? மதவாதக் கட்சி அது இதுன்னு பாத்தா முடியுமா? ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கணுமில்ல"

"பாடுபட்டீர்கள் படுக்கையில்லாதொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர்
மதக் கேடர்கள் காலில் வீழ்கின்றீர் - ஒண்ட
வீடுமில்லாமல் தாழ்கின்றீர்"

"அட பாஜக கட்சியை திட்டுறாரு"

"பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக்கும் பல
பீதிக்கும் வாய் திறப்பீர்களோ - இழி சாதி
என்றால் எதிர்ப்பீர்களோ - செல்வர் வீதியைத்தான்
மதிப்பீரோ"

"இவரு தலித் கட்சி ஒண்ணை சேர்ந்தவராத்தான் இருக்கணும்இ ஆனா எந்தக் கட்சினு புரியலையே"

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொது உடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்"

"அய்யய்யோ இவரு கம்யூனிஸ்டு போல இருக்கு!

"ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார்
இதை உணரப்பா நீ"

"சிவாஜி சார் பராசக்தில பேசின வசனமல்லா இது. ஒரு வேளை தமிழக முன்னேற்ற முன்னணியோ? சிவாஜி சார்தான் கட்சியை கலைச்சிட்டாரே"

"கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டத்தின் மீது
கடவுள் என்ற கட்டறுத்த
தொழிலாளரை ஏவுவோம்"

"திராவிடர் கழகம்னு நினைக்கிறேன். ஆனா அவங்க தேர்தலில பங்கு பற்றிலியே"

"கந்தையணிந்தோம் இரு
கையினை விரித்து எங்கள் மெய் போர்த்தோம்
சந்தையில் மாடாய் யாம்
சந்நதம் தங்கிட வீடுமல்லாமல்
சிந்தை மெலிந்தோம் எங்கள்
சேவைக்கெல்லாம் இது செய்நன்றிதானா?"

"இது கலைஞரு இதயத்தில மட்டும் இடம் கொடுத்த கட்சிகள்ல ஒண்ணை சேர்ந்தவராத்தான் இருக்கணும். அதுதான் புலம்புறாரு."

"நீலக்கடலும் முத்துப் பெட்டி
நெய்தல் நிலத்து பெண் மான் குட்டி
ஆளனுக்கே வரிந்து கட்டி
அளிக்குமுதடு சர்க்கரைக் கட்டி"

"அடஇ நம்ம டி.ஆர் ராஜேந்தரு போல பேசுறாரு"

"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்
தூங்குறு பகைவரை வாணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்"

"அட விடுதலைச் சிறுத்தைகளா? நெனைச்சேன்"
ஆனா எதுக்கும் அவரையே கேட்டுப்புடுவோம்
"அய்யா அய்யா நீங்க என்ன கட்சினே புரியலைங்கஇ உங்க பாட்டில எல்லாக் கட்சியுமில்ல இருக்கு எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்குங்க அய்யா"


"என்னப்பா கட்சி கட்சின்னு கேட்டுக்கிட்டு" என்று தலையில் அடித்துக்கொண்டு பாவேந்தர் பாடுகிறார்

"முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு - நீ
முன்னேறுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம் வீடு மறவா
நாம் தமிழர் நாம் தமிழர் என்றே பாடு"

"அய்யா! உங்களை பேட்டி காண தமிழ் பத்திரிகையிலேருந்து ஒரு பொண்ணு வந்திருக்காங்க"


"தமிழ் பேச்சு கேட்டு நாளாகிறது. வரச் சொல்"

"கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனி பசுவும் பொழியும் பாலும்
தென்னை நல்கிய குளிர் இளநீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்"

மிஸ்டர் பாரதிதாஸ்" டவலை எடுத்து ஷால்டர்ல வெச்சுக்குங்க. ஒரு வீக்லி டமில் மகஸீனுக்கு கவர் ஸ்ரோரிக்கு உங்களை போட்டோ ரேக் பண்ணப் போறோம். இது டமில் ஆடியன்சுக்கு. அதனால நீங்க மத்தவங்க அண்டஸ்டாண்டிங் பண்ணும்படியா ஈஸி டமில்ல மட்டும் பேசுங்க ப்ளீஸ் ஆர் யு ரெடி?


சினத்தால் பாவேந்தர் முகம் சிவக்க

"கொடியோர் செயலறக்
கொலைவாள் போதுமோ
எப்படியாயினும் கொணர்வேன
ஏகே 47 இப்பொழுதே"

என்று கத்திவிட்டு மறைகிறார்.
Author: இந்துமதி.சி.பா // Category: ,

0 Responses to "பாரதிதாசன் வந்தால் (ஒரு கற்பனை)!"

Post a Comment